×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த நபரின் உண்மையான வயது தெரிந்தால், அதிர்ந்து போவீர்கள்.! ஏன் தெரியுமா.?!

இந்த நபரின் உண்மையான வயது தெரிந்தால், அதிர்ந்து போவீர்கள்.! ஏன் தெரியுமா.?!

Advertisement

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் மிகவும் இளம் வயதினர் கூட தொந்தி, தொப்பையுடன் வயதான தோற்றத்தில் இருக்கின்றனர். ஒருபுறம் இளம் வயதிலேயே மாரடைப்பு, சர்க்கரை வியாதி என்று பலரும் அவதிக்குள்ளாகும் நிலையில் மறுபுறம் வயதான நபர்கள் கூட சரியான உணவுப் பழக்கம், டயட் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் இளமையான தோற்றத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றனர். அந்த வகையில் அமெரிக்க நாட்டின் மெக்சிகன் பகுதியைச் சேர்ந்த டேவ் பாஸ்கோ இனம் 61 வயது முதியவர் மிகவும் இளமையான தோற்றத்தில் காண்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

61 வயதானாலும் 38 வயது இளைஞரின் உடல் அமைப்பை பெற்று அவர் இளமையுடன் தோன்றுவதாக அவரே பெருமிதமாக தெரிவிக்கிறார். இது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது கட்டுப்பாடான உணவு மற்றும் கடுமையான உடற்பயிற்சி தான் இந்த ஆரோக்கியமான உடல் அமைப்புக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய நேரத்தை நான் சரியாக பயன்படுத்துகிறேன் எனவும், அதை நான் திட்டமிட்டு செலவழிப்பதால் எனக்கு என் உடலை ஆரோக்கியமாக மேம்படுத்த நேரம் கிடைக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில் மற்றவர்களுடன் சிறந்த நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் நான் இழப்பதில்லை என்று அவர் கூறுகிறார். கோழி, மீன் மற்றும் மாட்டு இறைச்சி, ஆர்கானிக் உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதாக தெரிவிக்கும் அவர் எளிமையான கார்போஹைட்ரேட்டுகளை அதிக நேரங்களில் நான் கட்டுப்படுத்துகிறேன். 
எனவே எனது உடல் எடை அதிகரிக்காமல் என்னால் பார்த்துக் கொள்ள முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fast food #American #fitness #Dev Bosco
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story