வித்தியாசமான கடைசி ஆசையுடன் உயிர் வாழ்ந்த 61 வயதுடைய முதியவர்! ஆசை நிறைவேற்றிய 2 மணி நேரத்திற்குள் உயிர் பிரிந்த சோகம்!
61 years old man different dream
61 வயதான ஜான் ஸ்டேன்லிக்கு சிறு வயது முதல் பைக் என்றால் அவ்வளவு பிரியம். அதிலும் இன்றைய இளைஞர்களின் கனவாக இருந்து வரும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது ஜான் ஸ்டேன்லி அதிக ஈடுபாடு காட்ட கூடியவர்.ஆனால் ஜான் ஸ்டேன்லியை புற்று நோயால் பாதிக்கபட்டவர்.மேலும் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், ஜான் ஸ்டேன்லியால் நடக்க கூட முடியாது. அவர் படுத்த படுக்கையாகதான் கிடந்தார்.
ஆனால் அவரது ஆழ் மனதிற்குள் கடைசி ஆசை ஒன்று இருந்தது. தான் உயிருக்கு உயிராக நேசித்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் கர்ஜனையை, உயிரிழப்பதற்குள் மீண்டும் ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.இதனை அறிந்த அவரது உறவினர் மைகேல் ஸ்மித் பைக் ஆர்வலரான டேவிட் தாம்ப்சன் என்பவரை அனுகினார்.
உடனே பேஸ்புக்கில் டேவிட் தாம்ப்சன் போஸ்ட் ஒன்றை வெளியிட்டார்.அதில், ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசை குறித்து அவர் உருக்கமாக விவரித்திருந்தார். அத்துடன் புற்று நோயால் துன்பப்படும் அந்த முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பும் பைக் ஆர்வலர்கள் அனைவரும் ஜான் ஸ்டேன்லியின் வீடு முன்பு ஒன்று திரள வேண்டும் என்ற கோரிக்கையையும் டேவிட் தாம்ப்சன் வைத்தார். மனதை உருக்கும் டேவிட் தாம்ப்சனின் இந்த பேஸ்புக் போஸ்ட் உடனடியாக வைரல் ஆனது.
டேவிட் தாம்ப்சனின் பேஸ்புக் பதிவை பார்த்ததும், சற்றும் யோசிக்காமல் ஜான் ஸ்டேன்லியின் வீடு நோக்கி 200 க்கும் மேற்பட்டோர் தங்களது பைக்குடன் வந்தனர்.அவர்கள் அனைவரும் இன்ஜினை ஸ்டார்ட் செய்து பைக்கை முறுக்க, அந்த சப்தத்தை கேட்டு ஜான் ஸ்டேன்லி மகிழ்ந்து போனார்.மேலும் பைக்கின் கர்ஜனையை இன்னும் நன்றாக கேட்க ஏதுவாக, ஜான் ஸ்டேன்லியின் உறவினர்கள் அவரை வீட்டிற்கு வெளியே தூக்கி வந்து அமர வைத்தனர். அப்போது பைக் ஆர்வலர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டினார் ஜான் ஸ்டேன்லி.அதன்பின் 2 மணி நேரம்தான் கடந்திருக்கும். தனது கடைசி ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் இவ்வுலகை விட்டு பிரிந்தார் ஜான் ஸ்டேன்லி.