பாரிஸில் நடைபெற்ற கொடூரத்தால் பாரிஸ் நகரம் மிகவும் பதற்றத்திலுள்ளது!!
7-injured-in-paris-knife-attack
மத்திய பாரிசில் ஞாயிறு பிற்பகுதியில் ஒரு கத்தித் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர், ஆனால் பொலிஸார் பயங்கரவாதத்தை சந்தேகிக்கவில்லை எனக் கூறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கத்தி மற்றும் இரும்புக் கம்பி கொண்டும் ஒரு மர்ம நபர் பொது மக்களைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்களில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் பிடிபட்டுள்ளார். பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தானைச்சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பயங்கரவாத பின்னணி இருக்கும் என்று தற்போதைக்கு தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தாக்குதலை நேரில் பார்த்த தியேட்டர் பாதுகாவலர் கூறுகையில், கத்தியால் தாக்கிய நபர், அவ்வழியாக சென்றவர்களை துரத்தி தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்ததை நான் பார்த்தேன். கையில் ஒரு இரும்பு தடியை வைத்து துரத்தினார். பயந்து ஓடியவர்கள் மீதும் இரும்பு தடியை வீசினார். அதன்பிறகு கத்தியைக்கொண்டு தாக்கத் துவங்கினார்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தேக நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.