அடக்கொடுமையே... துடிதுடிக்க பலியான 9 குழந்தைகள்.!! உலகை உலுக்கிய சோக நிகழ்வு.!!
அடக்கொடுமையே... துடிக்க பலியான 9 குழந்தைகள்.!! உலகை உலுக்கிய சோக நிகழ்வு.!!
சூடான் நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. மேலும் இந்த தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது.
உள்நாட்டுப் போர்
சூடான் நாடு இரண்டாகப் பிரிந்ததிலிருந்து அந்த நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக ராணுவம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த வருடத்திலிருந்து தற்போது வரை நடைபெற்று வரும் இந்தப் போரில் இதுவரை 16,650 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
9 குழந்தைகள் பரிதாப பலி
இந்நிலையில் மேற்கு சூடானின் தலைநகரான வடக்கு தர்பூர் ஸ்டேட் நகரில் உள்ள அல் ஃபேசர் என்ற இடத்தில் அமைந்துள்ள மசூதியின் மீது சூடானின் ரேப்பிட் பாரா மிலிட்டரி படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாகுற வயசா இது?.. பேட்மிட்டன் விளையாடியபடி துள்ளத்துடிக்க 2 நிமிடங்களில் உயிரிழந்த 17 வயது சிறுவன்.! பதறவைக்கும் வீடியோ.!
சொந்த நாட்டில் அகதிகளாகும் மக்கள்
சூடான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் போன்று வாழ்ந்து வருகின்றனர். சூடான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் வரை போர் காரணமாக 73 லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்துள்ளதாக ஐநா சபையின் மனிதநேய பிரிவு தெரிவித்துள்ளது.