மூக்கின் வழியே சென்று மூளையை தின்னும் அமீபாவின் கொடூரத் தாக்குதலுக்கு 17 வயது சிறுமி பலி.!
மூக்கின் வழியே சென்று மூளையை தின்னும் அமீபாவின் கொடூரத் தாக்குதலுக்கு 17 வயது சிறுமி பலி.!
அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது சிறுமியை நெக்லேரியோ ஃபோலேரி அமீபா தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நெக்லேரியோ ஃபோலேரி என்பது மிதமான வெப்ப நிலை கொண்ட குளங்கள் நன்னீர் குட்டைகள் மற்றும் ஏரிகளில் வாழக்கூடிய ஒரு வகை அமீபாவாகும். இது பாக்டீரியாக்களை தாக்கி அளிக்கும் வல்லமை கொண்டதோடு நீர் நிலைகளில் நீந்தி குளிக்கும் மனிதர்களின் மூக்கின் வழியாக சென்று மூளையை சேதப்படுத்தி மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.