கொடிய பரிதாபம்... மூளையை தின்னும் அமீபா... 2 வயது பிஞ்சு பலி... மருத்துவர்கள் எச்சரிக்கை.!
கொடிய பரிதாபம்... மூளையை தின்னும் அமீபா... 2 வயது பிஞ்சு பலி... மருத்துவர்கள் எச்சரிக்கை.!
அமெரிக்காவில் கொடிய வகை மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற நோயின் தாக்குதல் அங்கு அடிக்கடி நடந்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவைச் சார்ந்த இரண்டு வயது சிறுவன் கடந்த ஏழு நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.