தடம்புரண்ட சரக்கு இரயில்.. டிவி உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை களவாடிய மக்கள்..!
அமெரிக்காவில் உள்ள சிகாகோ, இலியானாஸ் பகுதியில் கடந்த அக்.16ம் தேதியன்று
அமெரிக்காவில் உள்ள சிகாகோ, ஆஸ்டின் பகுதியில் கடந்த அக்.12 அன்று சரக்கு இரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சரக்கு இரயில் அங்கேயே நிறுத்திவைக்கப்ட்ட நிலையில், தகவல் அறிந்த மீட்புப்படை அதிகாரிகள் விறைத்துகொண்டு இருந்தனர்.
அதிகாரிகள் வருவதற்குள் திருட்டு சம்பவம்
இதனிடையே, மீட்புப் பணி அதிகாரிகள் வருவதற்குள், அங்கு வந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கூட்டம், இரயில் பெட்டியை உடைந்து அதில் உள்ள பொருட்களை களவாடிச் சென்றனர். சுமார் 50 முதல் 150 பொருட்கள் திருடப்பட்டது. இவற்றில் சில பெரிய ரக ஸ்மார்ட் டிவிக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குட்டி செல்லங்களை அப்படியே அள்ளிகொஞ்சனும் போலவே.. செல்லகுட்டீசின் உணவு ட்ரஸ்.!
திருட்டு வீடியோ வைரல்
இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய குழு தொடர்பான சர்ச்சை தற்போது உண்டாகியுள்ளது. ஏனெனில், அங்குள்ள பொருட்களை திருடியது ஒரு குறிப்பிட்ட நாட்டில் வசித்து வந்தவர்கள் என தகவல் வைரலாக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது வரை இது உறுதி செய்யப்படவில்லை. அதிகாரபூர்வ கைது நடவடிக்கை குறித்து காவல்துறையும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக மனைவி, மகள், மாமியார் என யாரையும் விட்டுவைக்காத கொடுமை; 54 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!