காதலர் தினத்தன்று பூமியை தாக்குகிறது விண்கல்.. உலகின் இறுதி அத்தியாயம் நெருங்குகிறதா?..! பகீர் கிளப்பும் நாசா..!!
காதலர் தினத்தன்று பூமியை தாக்குகிறது விண்கல்.. உலகின் இறுதி அத்தியாயம் நெருங்குகிறதா?..! பகீர் கிளப்பும் நாசா..!!
நமது பூமி உள்ள பால்வளி அண்டத்தில் பல வினோதங்கள் நிறைந்திருக்கின்றன. அவ்வப்போது சில விண்கற்கள் பூமியின் அருகே வந்து செல்வதும், பூமிக்குள் வந்து விழுவதுமாக இருக்கும். இந்த நிலையில் சிறுகோள் ஒன்று பூமிமீது மோத உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து 0.12 வானியல் அலகுகள் (AU) தொலைவில் இருக்கும் சிறுகோள், '2023 dw' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சிறுகோளின் திசையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இது பிப்ரவரி 14-ஆம் தேதி, 2046 அன்று பூமியின் மீது மோதும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் எதிர்கால திட்டமிடுதலோடு கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது காதலர் தினத்தன்று அந்த விண்கல் பூமி மீது மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.