"அதெப்படி திமிங்கலம்... மீனுக்கு மனுச பல்லு மாதிரி இருக்கும்"? 11 வயது சிறுவனிடம் சிக்கிய மனித அதிசய மீன்.?
அதெப்படி திமிங்கலம்... மீனுக்கு மனுச பல்லு மாதிரி இருக்கும்? 11 வயது சிறுவனிடம் சிக்கிய மனித அதிசய மீன்.?
அமெரிக்காவைச் சார்ந்த இளம் மீனவரான சார்லி கிளின்டன் என்பவர் பிடித்துள்ள மீன் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மீன் தொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
அமெரிக்காவைச் சார்ந்த இளம் மீனவரான சார்லி கிளின்டன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர் பிடித்த ஒரு மீனிற்கு மனிதனைப் போன்றே பற்கள் இருந்திருக்கிறது. இந்த மீன் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மீன் தென் அமெரிக்காவைச் சார்ந்த மீன் வகை என்றும் பக்கு இனத்தைச் சார்ந்த மீன் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மீனினம் பிரானாவுடன் தொடர்புடையது என்றாலும் பிரன்ஹா மீனைப் போன்று ஆபத்தானது இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்களும் கடல் மற்றும் நீர் வாழ் உயிரின பாதுகாவலர்களும் தெரிவித்திருக்கின்றனர். நன்னீர் இடங்களில் வாழும் இந்த வகை மீன்கள் 3.5 அடி நீளம் மற்றும் 88 பவுண்ட் எடை வரை வளரக்கூடியது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித இனத்தைப் போன்று பற்களை உடைய நீர் வாழ் உயிரினம் பிடிபடுவது இது முதல் முறையல்ல. 2022 ஆம் ஆண்டு மனிதனைப் போன்றே பற்களை உடைய நண்டின் புகைப்படத்தினை ரஷ்யாவைச் சார்ந்த புகைப்படக் கலைஞர் ரோமன் ஃபெடார்ட்சோவ் என்பவர் பகிர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.