×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உயிரைக் குடித்த 30 கிராம் ஹெராயின்... 20 வருடங்களுக்குப் பின் முதல்முறையாக பெண்ணிற்கு தூக்கு... அதிர்ச்சி ரிப்போர்ட்.!

உயிரைக் குடித்த 30 கிராம் ஹெராயின்... 20 வருடங்களுக்குப் பின் முதல்முறையாக பெண்ணிற்கு தூக்கு... அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Advertisement

20 வருடங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் நாட்டில்  பெண் ஒருவருக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த  சாரிதேவி  ஜமானி  என்ற 45 வயது பெண்ணிற்கு  இன்று அதிகாலை சிங்கப்பூர் நேரப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 2018 ஆம் ஆண்டு இவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

30 கிராம் ஹெராயின் இவர் கடத்தி வந்ததால் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் சட்டப்படி 15 கிராமுக்கு அதிகமாக வைத்திருப்பது  மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.இதனைத் தொடர்ந்து சாராதேவி 30 கிராம் காராயின் வைத்திருந்ததால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு 36 வயதான சிகையலங்கார நிபுணர் யென் மே வோன், போதை பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு  தற்போது தான் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டிருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #Singapore #Crime #Drugs Smuggling #death sentence in 20 year
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story