×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேற்கத்தியரை போல முடிவெட்டினால்..., தலிபான்கள் உச்சகட்ட எச்சரிக்கை..!

மேற்கத்தியரை போல முடிவெட்டினால்..., தலிபான்கள் உச்சகட்ட எச்சரிக்கை..!

Advertisement

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்களது ஆட்சியில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில், தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.

மேலும், "அவர்கள் பயங்கரவாத செயல்களில் இருந்து விலகி, பொதுமக்களுக்கு உரிய நல்லாட்சியை வழங்குவோம்" என்று கூறியுள்ளனர். இருப்பினும் அவர்களது ஆட்சியை கண்டு அஞ்சிய சில மக்கள், அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதன்படி ஹெராத் மாநகரத்தில் உள்ள சலூன் கடைகளில் மாணவர்களுக்கு மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என மேற்கத்தியர்களை போல முடிகளை வெட்ட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பல்கலைகழகங்களில் பள்ளி மாணவிகள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என எச்சரித்த நிலையில், அரசுப் பணியில் உள்ளவர்கள் பணியாற்றும்போது முழு அளவில் வளர்ந்த தாடி வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அரசு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தாடியை வளர்க்காமல் இருந்ததும், இஸ்லாமிய சட்டப்படி முறையாக உடை அணியவில்லை என்றும் காரணம் காட்டி பலர் வேலைக்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிர் மற்றும் ஆடவர் இருவரும் தனித்தனியாக அவர்கள் அறையில் கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டும் என கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஹெராத் மாகாணத்தில் துணி விற்பனை செய்யும் கடைகளில், பொம்மைகளுக்கு தலை இருக்கக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

அத்துடன் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் சோப் மற்றும் நாடக விளம்பரங்களில் நடிக்கும் பெண்களின் காட்சிகளை நிறுத்தும்படியும் தலிபான்கள் தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Afganistan #Rules #Peoples #Fear
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story