ஆட்டோவில் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்ட நாய்கள்.. நெகிழ்ச்சி செயலில் இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!
ஆட்டோவில் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்ட நாய்கள்.. நெகிழ்ச்சி செயலில் இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக உள்ள கானாவில் உள்நாட்டுப்போர், உணவுப்பஞ்சம் போன்ற பல்வேறு சர்ச்சைகளால் அந்நாட்டின் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தொண்டு நிறுவனங்கள் செய்தாலும், அவை அவர்களின் வாழ்வியலுக்கு போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தினமும் கஷ்டப்பட்டு உயிர் வாழ்ந்து வரும் மக்கள், உணவுக்காக தள்ளாடி வருகின்றனர். இறைச்சிக்காக நாய்கள் ஆட்டோ ஒன்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
ஆட்டோவில் நாய்களின் கால்களை கட்டி இறைச்சிக்காக கொண்டு செல்லும் விஷயத்தை கண்டு அதிர்ச்சியடைந்த விலங்கின ஆர்வலர் ஒருவர், அதனை மீட்டு தன்னுடைய காரில் ஏற்றிச்சென்று மறுவாழ்வு மையத்தில் விடுகிறார். இந்த நெகிழ்ச்சி செயல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.