தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாதவிடாயை கண்டறிய பெண்களை அரைநிர்வாணப்படுத்தி சோதனையிட்ட 3 பேர் கைது; தனியார் நிறுவனத்தில் பகீர் செயல்.!

மாதவிடாயை கண்டறிய பெண்களை அரைநிர்வாணப்படுத்தி சோதனையிட்ட 3 பேர் கைது; தனியார் நிறுவனத்தில் பகீர் செயல்.!

Africa Kenya Women Employees Forced to Remove Innerwear to Find Periods  Advertisement

File Pic

ஆப்ரிக்காவில் உள்ள கென்யாவில் செயல்பட்டு வரும் Dairy நிறுவனத்தின் உணவு தயாரிப்பு தொழிற்சாலையில் ஏராளமான ஆண் - பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

இந்நிலையில், அங்கு பணியாற்றி வரும் பெண் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படவே, அவர் தவறான குப்பை பக்கெட்டில் மாதவிடாய் பேட்களை அப்புறப்படுத்தி இருக்கிறார். 

இதனை அறிந்த நிறுவுனத்தின் மேலாளர், பெண்களில் யாருக்கு மாதவிடாய்? என்பதை கண்டறிய அவர்களின் ஆடையை அகற்ற வற்புறுத்தி இருக்கின்றனர். 

Africa

File Pic

இந்த விசயம் தொடர்பான தகவல் தெரியவரவே, அங்குள்ள பல சமூக ஆர்வலர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் நிறுவனத்தில் இருந்து தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Africa #kenya #periods #Inner Wear
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story