தரையிறங்கும் போது நிற்காமல் ஓடிய விமானம்! நெடுஞ்சாலைக்கு சென்றதால் பரபரப்பு! பதறிய 135 பயணிகள்.
Airoplane
ஈரான் விமான நிலையத்தில் 135 பயணிகளுடன் தரையிறங்க இருந்த விமானம் ஒன்று ஓடுப்பாதையில் நிற்காமல் வெளியே சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸ்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ஸ்ஹர் நகருக்கு 135 பயணிகளும் வந்துள்ளது.
அப்போது மக்ஸ்ஹர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க வந்த போது எதிர்பாராத விதமாக விமானமானது நிற்காமல் ஓடுப்பாதையிலிருந்து வெளியே உள்ள நெடுஞ்சாலைக்கு சென்றுள்ளது.
தரையில் உரசிய படியே சிறிது தூரம் சென்ற விமானம் பின் நிற்றது. அதில் பயணித்த 135 பயணிகள் அவசர கால வழியாக வெளியேற்றப்பட்டனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.