இரத்த ஓட்டமில்லை, இதய துடிப்பில்லை..! 7 மாதங்கள் உறைந்து பின் உயிர்த்தெழும் அதிசய மரத்தவளை..!
இரத்த ஓட்டமில்லை, இதய துடிப்பில்லை..! 7 மாதங்கள் உறைந்து பின் உயிர்த்தெழும் அதிசய மரத்தவளை..!
7 மாதங்கள் -29 டிகிரி செல்சியஸில் உறைந்து, பருவகாலத்தில் உயிர்த்தெழும் அதிசய மரத்தவளை குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும், பல்வேறு விதமான காலநிலையை கொண்டது ஆகும். அமெரிக்காவும் அதனைப்போலத்தான். பாலைவனம், மலைச்சிகரங்கள், பனிசூழ்ந்த பகுதிகள், பள்ளத்தாக்கு மற்றும் சமவெளிப்பகுதிகள் என தன்னகத்தே பல விதமான நிலப்பரப்புகளை கொண்டுள்ளன.
இவற்றில் அலாஸ்கா மாகாணத்தில் வருடத்தின் 7 மாதங்கள் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் பனிக்காலத்தில், -2 டிகிரி செல்ஷியஸில் தொடங்கும் குளிர், அக்., நவ., டிச., ஜன., என ஏப்ரல் வரை 7 மாதங்களில் -29 டிகிரி வரை சென்று, மே மற்றும் ஜூன் மாதத்தில் -9 டிகிரி அளவில் இருக்கும்.
இடைப்பட்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 டிகிரி, 2 டிகிரி என வெப்பம் பதிவாகும். அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு, அங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலை பழகியது என்றாலும், அவ்வப்போது ஏற்படும் கடுமையான குளிர் புயலை எதிர்கொள்ளவும் தயாராகத்தான் இருப்பார்கள். அங்கு நடைபெறும் கட்டுமான பணிகள் அனைத்தும் மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே பெருமளவு நடைபெறும்.
அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு சரி. அங்குள்ள விலங்குகள் என்ன செய்யும் என்று கேட்டால், வருடத்தின் 7 மாதம் இதய ஓட்டம் மற்றும் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, பனிக்குள் உறைந்து பின்னர் பருவகாலம் வந்ததும் மீண்டு வரும் அதிசிய மரத்தவளை அங்கு இருக்கிறது. இதை இயற்கையின் அற்புதம் என்றும் கூறலாம்.
கிட்டத்தட்ட 7 மாதங்கள் வரை எவ்வித உணவும் இல்லாமல், உடலில் இரத்தம் பாயாமல், உடலின் தோல் பகுதிகள் முதல் இதய பகுதிகள் வரை உறைந்து, உடல் அழுகாமல் பனி பார்த்துக்கொள்ள, பருவகாலம் வந்ததும் பனி உருகி தவளை மீண்டும் தனது வாழ்நாளை தொடங்குகிறது.