திட்டிச்சென்ற காதலியை தீர்த்துக்கெட்ட திட்டம்... ஃபயர் சேஸிங்கில் காதலனுக்கு என்ன நடந்தது தெரியுமா?..!
திட்டிச்சென்ற காதலியை தீர்த்துக்கெட்ட திட்டம்... ஃபயர் சேஸிங்கில் காதலனுக்கு என்ன நடந்தது தெரியுமா?..!
தன்னை கடித்துவிட்டு சென்ற காதலியின் காரை ஹாலிவுட் திரைப்பட பாணியில் துரத்தி சென்ற காதலன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணம், போனிக்ஸ் நகர் பகுதியை சார்ந்தவர், சம்பவ நாளில் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது, காதலி அவரை கடித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்தவர் தனது காதலியின் காரை ஹாலிவுட் திரைப்பட பாணியில் துரத்தி சென்றுள்ளார். மேலும், காதலி சென்ற காரில் பலமுறை மோதிய நிலையில், காதலி தனது காரின் வேகத்தை அதிகரித்து தப்பி சென்றுள்ளார்.
காதலனும் காதலியின் காரை முந்திச்செல்ல முயற்சித்த நிலையில், எதிர்பாராத விதமாக அவரை கார் எதிர்திசை சாலையில் பாய்ந்து, மற்றொரு காரின் மீது மோதி விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில், காதலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், எதிர்திசை காரில் வந்த ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
உயிருக்கு போராடிய ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கார் துரத்தல் சம்பவத்தில் காதலி மட்டும் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.