டொனால்ட் டிரம்ப் இப்படித்தான் அதிபரானாரா? வெளியான அதிர்ச்சி தகவல்.!
america athiper donald drump in cheeting man
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 700 நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 10 என 7500 க்கும் மேற்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்க பத்திரிக்கை ஒன்று இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘டிரம்ப், அதிபராக பதவியேற்றது முதல் தற்போதுவரை, நாள் ஒன்றுக்கு சராசரியாக 10.78 தவறான தகவல்கள் அல்லது பொய்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடந்த நேரத்தில், அக்டோபர் மாதம் 1,205 ஆதாரமற்ற அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். முதல் 8 மாதத்தில் 1,137 குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
மேலும், டிரம்பின் தேர்தல் பிரசார உரை, ஆதரவாளர்களிடையே பேசிய நிகழ்ச்சி என பல கோணத்தில் ஆய்வு மேற்கொண்ட பேக்ட் செக்கர்ஸ் டேட்டாபேஸ் (The Fact Checker's database) என்ற நிறுவனம்: அதில் 35 முதல் 45 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும், அதிபரான பின், அதே நிலை தான் தொடர்ந்து பின்பற்றி வந்ததாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ம் தேதியுடன், அதிபராக டிரம்ப் பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்தது. இதுவரை 7,546 தவறான அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.