கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு தடை.. கண்டனத்துடன் வெடித்த சர்ச்சை..! புனித நூலுக்கு தடை விதிப்பதா?..!
கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு தடை.. கண்டனத்துடன் வெடித்த சர்ச்சை..! புனித நூலுக்கு தடை விதிப்பதா?..!
அமெரிக்க நாட்டில் உள்ள உட்டா மாகாணத்தின் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் பைபிள் தடை செய்யப்பட்டுள்ளது. ஹிந்துக்களுக்கு பகவத் கீதை, முஸ்லிம்களுக்கு குரான் போல, கிறிஸ்தவர்களின் புனித நூலாக பைபிள் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் பைபிளில் அநாகரீகம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான தலைப்புகள் இருப்பதாகவும், கிங் ஜேம்ஸ் பைபிளில் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற தலைப்புகள் இருப்பதாகவும் பெற்றோர்கள் புகாரளித்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை தற்போது அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்மறையான கருத்துக்களால் சர்ச்சை வெடித்து வருகிறது.