நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. சிக்கிக்கொண்ட நாய்.. உயிரை காப்பாற்றிய காவலர்.!
நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. சிக்கிக்கொண்ட நாய்.. உயிரை காப்பாற்றிய காவலர்.!
அமெரிக்காவில் உள்ள கொலரோடா மாகாணத்தின், டக்ளஸ் கவுண்டி பகுதியில் கார் ஒன்று சாலையில் தீப்பற்றி எரிவதாக காவல் துறையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கிரெகோரேக் (Gregorek) என்ற காவல் அதிகாரி, கார் எரியும் இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அப்போது, காரின் உரிமையாளர் நாயொன்று காரில் சிக்கியுள்ளது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சுதாரித்துக்கொண்ட காவலர் விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்த நிலையில், காரில் தீயால் புகை இருந்தது. இதனால் நாய் என்று என்று தெரியவில்லை. உரிமையாளர் கண்கலங்கியபடி டிக்கி பகுதியில் நாய் உள்ளது என்று தெரிவிக்கிறார்.
இதனையடுத்து, காரின் பின்புற கண்ணாடியை உடைத்து நாயை தேடுகையில், அது முதலில் வெளியே வர மறுக்கிறது. பின்னர் காரின் உரிமையாளர் நாயை அழைத்ததும் (அதன் பெயர் ஹேங்க் - Hank) அது வந்துவிட, காவல் அதிகாரியும் - நாயின் உரிமையாளரும் நாயை பத்திரமாக காப்பாற்றினார்.
இந்த வீடியோ விழிப்புணர்வு மற்றும் சிறந்த பணிக்காக பாராட்டு என்று சமீபத்தில் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.