முதல் மனைவியின் நகை, திருமண ஆடையை திருடி 2 ஆவது மனைவிக்கு பரிசு.. ஜோடியாக கைதான தம்பதிகள்.!
முதல் மனைவியின் நகை, திருமண ஆடையை திருடி 2 ஆவது மனைவிக்கு பரிசு.. ஜோடியாக கைதான தம்பதிகள்.!
முன்னாள் மனைவியின் நகை, உடையை திருடி வருங்கால மனைவிக்கு அளித்ததால், திருமண நாளில் மணமக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மேரி என்ற பெண்மணியும், ஆடம் என்பவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாகவே இருவரும் திருமணமும் செய்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கு பின்னர் காதலால் இணைந்த ஜோடியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மேரி நிறுவனத்தில் இருந்து விலகி கணவரை விவாகரத்து செய்துகொண்டார்.
இதனைதொடர்ந்து, சில வருடங்கள் தனிமரமாக வாழ்ந்து வந்த ஆடம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த செல்சியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். ஆனால், அலுவலகத்தில் பணியாற்றி வருபவர்கள், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் உள்ளது. இதனை அறிந்த மேரி கணவரை விவகாரத்து செய்துகொண்டார் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்த ஆடம் - செல்சியா ஜோடி, நிறுவனத்தில் பணியாற்றி வரும் சக நண்பர்களையும் அழைத்துள்ளனர். திருமணத்தின் போது செல்சியா அணிந்திருந்த உடையை எங்கேயோ பார்த்திருப்பது போல தோன்றுகிறதே என ஊழியர்கள் சந்தேகிக்க, அது மேரியின் ஆடைகள் என்பது உறுதியானது.
இதனையடுத்து, மணக்கோலத்தில் இருந்த தம்பதிகளின் புகைப்படத்தை எடுத்து மேரிக்கு அனுப்பி வைக்க, தனது ஆடையை பார்த்து அதிர்ந்துபோன அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக திருமணம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று திருமண உடை மற்றும் நகைகள் குறித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில், ஆடம் தனது முதல் மனைவியின் உடைகள் மற்றும் நகைகளை திருடியது அம்பலமாக, செல்சியாவோ அதனை வழங்க மறுத்து வாக்குவாதம் செய்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு ஆதரவாக ஆடமும் குரலை உயர்த்த, பொறுத்து பார்த்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.