பக்கத்து சிறை பெண்ணை, தொடாமலேயே கர்ப்பமாக்கிய இளைஞர்.! பதறிப்போன நிர்வாகிகள்.! என்ன நடந்தது.?!
பக்கத்து சிறை பெண்ணை, தொடாமலேயே கர்ப்பமாக்கிய இளைஞர்.! பதறிப்போன நிர்வாகிகள்.! என்ன நடந்தது.?!
தனிமை சிறையில் இருந்த கைதிகள்
அமெரிக்க நாட்டின் மியாமி பகுதியில் டர்னர் கில்ஃபோர்ட் எனும் சிறை அமைந்துள்ளது. இதில் கடந்த 2020இல், கொலை குற்றத்திற்காக டெய்சி லிங்க் (வயது 29) என்ற பெண் குற்றவாளி தனிமை சிறை ஒன்றில், அடைக்கப்பட்டு இருக்கின்றார். இதுபோல ஜோன் டெபாஸ் (வயது 24) என்ற ஆண் குற்றவாளி ஒருவர் வேறொரு வழக்கில் அருகில் இருந்த தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த இருவரும் ஒருவரை ஒருவர் ஒருபோதும் சந்தித்துக் கொண்டதே இல்லை.
அதிர்ச்சியில் சிறை நிர்வாகிகள்
ஆனால் தற்போது, இவர்கள் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. இது சிறை நிர்வாகத்தினர், உட்பட பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. டெய்சி குழந்தையை பெற்றெடுத்த போது சிறை நிர்வாகத்தினரும், மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், பக்கத்து சிறையில் இருக்கும் டெபாஸ் தான் தன் குழந்தைக்கு தந்தை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீரென தோன்றிய பறக்கும் வெளிச்சம்.. ஏலியன் விமானமா..?! மக்கள் அதிர்ச்சி.!
ஏசி வென்ட் மூலம் காதல்
இதை நம்ப முடியாமல் அவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு டெபாஸ் தான் அந்த குழந்தைக்கு தந்தை என்பதை உறுதி செய்துள்ளனர். இது பற்றி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரிடமும், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சில நம்ப முடியாத உண்மைகள் வெளிவந்துள்ளன. தனி தனியாக சிறையில் இருந்த இருவரும் ஏசி வென்ட் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.
சிறையிலேயே பிறந்த குழந்தை
பின், அவர்கள் நெருங்கி பழக ஆரம்பித்த நிலையில், டெபாஸ் தனக்கு தந்தையாக வேண்டும் என ஆசையாக இருப்பதாகவும், ஆனால் அது நடக்காது என்றும் கவலையுடன் தெரிவித்து இருக்கிறார். இதை கேட்ட டெய்சி அவருக்கு உதவ நினைத்துள்ளார். இவர்களின் திட்டப்படி, டெபாஸ் ஏசி வென்ட் மூலம், விந்தணுக்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பெட் சீட்டில் வைத்து கட்டி அதை டெய்சி அறைக்கு அனுப்பியுள்ளார். அதை டெய்சி தனது பிறப்புறுப்பின் வழியே செலுத்தி கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் கர்ப்பமாகி குழந்தையும் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பிரபல தாதா லாரன்ஸ் பீஷ்னோய் சகோதரர் அன்மோல் கைது?..