அமெரிக்காவை புரட்டியெடுக்கும் பனிப்பொழிவு.. அவசரநிலை பிரகடனத்தால் மக்கள் தவிப்பு.!
அமெரிக்காவை புரட்டியெடுக்கும் பனிப்பொழிவு.. அவசரநிலை பிரகடனத்தால் மக்கள் தவிப்பு.!
அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகராக உள்ள வாஷிங்க்டன், பென்சில்வேனியா உட்பட பல மாகாணங்களில் பலத்த காற்றுடன், பனியும் பொழிந்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள், மரங்கள், சாலைகள் பனிப்போர்வையால் சூழப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் சில இடங்களில் வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
பனிபொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக முடங்கியுள்ள நிலையில், கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் ஒரு அடி அளவு முதல் 3 அடி வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால் கடலோர நகரங்களில் உள்ள 1,17,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கின் அண்டை மாகாணமாக இருக்கும் நியூஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் கவர்னர்கள் மக்களை அறிவுறுத்தி இருக்கின்றனர்.