ரஷியாவுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டால்., - அமெரிக்க அதிபர் சீனாவுக்கு எச்சரிக்கை.!
ரஷியாவுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டால்., - அமெரிக்க அதிபர் சீனாவுக்கு எச்சரிக்கை.!
உக்ரைனுக்கு எதிராக பிராந்திய பாதுகாப்பு கருதி ரஷியா போர் தொடுத்து சென்றுள்ள நிலையில், மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தனது பனிப்போரை நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு பொருளாதார மற்றும் இராணுவ உதவி செய்து வருகிறது. அவர்கள் நேரடியாக போர்க்களத்திற்கு வந்தால் வரலாற்றில் பதிவு செய்யப்படாத பேரழிவை தருவேன் என ரஷியா முதலிலேயே தெரிவித்துவிட்டது.
இதனால் ரஷியாவின் பொருளாதாரத்தை சிதைக்கும் பொருட்டு மேற்கு ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நட்பு நாடுகள் பல்வேறு பொருளாதார தடையை ரஷியாவின் மீது அமல்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தை கடந்தும் ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பு என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரூசெல்ஸ் நகரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "உக்ரைன் நாட்டில் ரஷியா இரசாயன தாக்குதலில் ஈடுபட்டால், அதற்கு தக்க பதிலடியானது வழங்கப்படும். சீனா ரஷியாவை விட மேற்கு நாடுகளுடன் தான் அதிகளவு பொருளாதார வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இது அந்நாட்டு அதிபரான ஜி ஜின்பிங்குக்கு நன்கு தெரியும் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் ரஷியாவுடன் நெருக்கமான தொடர்பை சில விஷயங்களில் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. அவ்வாறு அவர் ரஷியாவுடன் இணைய முயற்சித்தால் அதற்கான பதிலடியை அவர் எதிர்கொள்ள வேண்டும்.
ஜி 20 நாடுகளில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்பது எனது விருப்பம். பிற நாடுகளுடன் ஆலோசனை செய்து, அவர்களின் விருப்பம் கேட்டறியப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். இந்தோனேஷியா போன்ற நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களின் பார்வையில் உக்ரைன் தொடர்பான விவாதங்களை பார்க்க அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.