கொரோனாவுக்கு சிறந்த மருந்து இதுதான்..! இதை உடனே பயன்படுத்துங்க.! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
America president revels name of medicines to control corono
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவையும் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை.
அமெரிக்காவிலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18-ம் தேதி வெளியிட்டிருந்த அறிவிப்பில் ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கொரோனா வைரஸை கொள்ளும் இரண்டு மருந்துகளின் பெயரை இன்று அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டு வந்தால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை தமக்கு இதை பரிந்துரை செய்தததாகவும், அந்த துறைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். கொரோனவால் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், விரைந்து செயல்படுங்கள் எனவும் ட்ரம்ப் கோரிக்கைவைத்துள்ளார்.