சிறுவனை கடித்து குதறிய நாய்.. முகம் சிதைந்து இரத்த வெள்ளம்.. தீரத்துடன் செயல்பட்டு காப்பாற்றிய பெண்மணி..!
சிறுவனை கடித்து குதறிய நாய்.. முகம் சிதைந்து இரத்த வெள்ளம்.. தீரத்துடன் செயல்பட்டு காப்பாற்றிய பெண்மணி..!
அமெரிக்காவில் உள்ள டெக்சஸ் மாகாணம், ரெனோ பகுதியை சேர்ந்த பெண்மணி கசாண்ட்ரா வேர். இவருக்கு கானர் லேண்டர்ஸ் (வயது 7) என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தனது பள்ளியில் இருந்து வீட்டிற்கு பேருந்து மூலமாக வந்த நிலையில், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரமாக வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது, அண்டை வீட்டார் வளர்த்து வரும் நாயொன்று சிறுவனை கடித்து குதறியுள்ளது.
சிறுவனை கடித்து துண்டுத்துண்டாக்கும் எண்ணத்துடன் மூர்க்கத்தனமாக செயல்பட்ட நாய், சிறுவனின் முகம், மார்பு, கை, கால்கள் பகுதியை கடித்துள்ளது. அவனின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டு பெண்மணியான லோரேனா பர்க்கர் விரைந்து வந்து பார்த்துள்ளார். அதிர்ச்சியுடன் ஒருகணம் திகைத்த பெண்மணி, சுதாரிப்புடன் செயல்பட்டு சிறுவனை மீட்க முயற்சித்துள்ளார்.
முதலில் சிறுவனை தாக்கிய நாய் அதில் இருந்து பின்வாங்காமல் இருந்த நிலையில், கையில் தடியுடன் நாயை அடித்து அங்கிருந்து விரட்டி இருக்கிறார். இரத்த வெள்ளத்துடன் கதறிய சிறுவனை விரைந்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்துள்ளார். மொத்தமாக சிறுவனின் முகம், கைகளில் 12 இடங்களில் காயம், உச்சந்தலை மற்றும் கழுத்து, கால்கள், மார்பு பகுதிகளில் பற்களால் ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் இருந்துள்ளது.
Image: Woman, Owner of Dog
சிறுவனின் முகத்தை மீண்டும் இணைக்க 3 மணிநேர அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில், நரம்பு மற்றும் கண்ணீர் குழாய் சேதத்தை சரி செய்ய மேலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நாயினை பிடித்து தனிமைப்படுத்திய நிலையில், அது வெறியுடன் காணப்பட்டதால் கடந்த வாரத்தில் கருணைக்கொலையும் செய்தனர்.
மேலும், நாயின் உரிமையாளரான பட்டி ஜீன் பெல் நெல்வேலிங் (வயது 49) என்பவரையும் கைது செய்தனர். அவர் 10 ஆயிரம் டாலர் இழப்பீடு வழங்கி, சொந்த ஜாமினில் வெளியே வந்துள்ளார்.