இருமல் மருந்தில் சமைக்கப்படும் கோழி இறைச்சிகள்: பகீர் வீடியோ வைரல்., எச்சரிக்கை விடுத்துள்ள மருந்து கட்டுப்பாடு நிறுவனம்.!
இருமல் மருந்தில் சமைக்கப்படும் கோழி இறைச்சிகள்: பகீர் வீடியோ வைரல்., எச்சரிக்கை விடுத்துள்ள மருந்து கட்டுப்பாடு நிறுவனம்.!
அமெரிக்க டிக்-டாக் வீடியோவில் இருமல் மருந்து ஊற்றி கோழி இறைச்சி சமைத்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ வைரலாகி இருந்தது. பலரும் இதனை பின்பற்றி சாப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்காவின் உணவு & மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், "கோழி இறைச்சியை இருமல் மருந்து ஊற்றி சமைக்க கூடாது. இது பாதுகாப்பு இல்லாதது.
மருந்தினை நாம் கொதிக்க வைக்கும்போது, அதன் பண்புகள் மாறுபடும். அதேபோல, இருமல் மருந்தில் வேக வைக்கப்படும் கோழியின் மனம் நச்சானதாக மாற வாய்ப்புள்ளது. இதனால் நுரையீரல் பாதிக்கப்படலாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.