செய்தியாளரை நாகூசும் வார்த்தையால் பச்சையாக திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன்..!
செய்தியாளரை நாகூசும் வார்த்தையால் பச்சையாக திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன்..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில், கேள்வி எழுதிய செய்தியாளரை தரக்குறைவான வார்த்தையால் திட்டிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்ட போது இருந்த மக்கள் ஆதரவு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவரின் செல்வாக்கு 54 % ஆக இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் 41 % ஆக குறைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றுதல், அதிகரித்து வரும் விலைவாசி போன்ற காரணத்தால் ஜோ பைடனின் ஆட்சி தடுமாறி வருகிறது. இந்த நிலையில், ஜோ பைடன் தனது வாயால் அவதூறான வார்த்தையை பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்த போது, அங்கு இருந்த பத்திரிகையாளர் பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ஜோ பைடன் செய்தியாளரிடம் அவதூறான வார்த்தையை (What a stupid son of a b*tch) பேசி திட்டி இருக்கிறார்.
இந்த விஷயம் குறித்து ஜோ பைடன் தரப்பினர் கூறுகையில், பணவீக்கம் குறித்த தரவுகளையே அதிபர் அவ்வாறு விமர்சித்தார், பத்திரிகையாளரை திட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
கடந்த டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில், அவருக்கு எதிராக ஊடகங்கள் செயலாற்றி வந்த நேரத்தில், ஊடகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது தவறானது என்று கூறிய ஒற்றை வார்த்தைக்காக, அங்குள்ள பல ஊடகங்கள் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கம்பு சுற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.