மனைவி விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனதால்... கணவன் செய்த கொடூர செயல்...!!
மனைவி விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனதால்... கணவன் செய்த கொடூர செயல்...!!
அமெரிக்காவில் மனைவி விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் ஏனோக் அடுத்த உட்டா குடியிருப்பு பகுதியில் மைக்கேல் ஹைட் என்பவர், தனது ஐந்து குழந்தைகள், அவரது மாமியார் மற்றும் அவரது மனைவி தவுஷா ஹைட்ஸ் ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளார். அவரது வீட்டில் இருந்து சிறுமி உட்பட எட்டு பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டனர்.
இதுகுறித்து ஏனோக் காவல்துறைத் தலைவர் ஜாக்சன் அமேஸ் கூறுகையில்,
முதற்கட்ட விசாரணையில் அவரது மனைவி தவுஷா ஹைட்ஸ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனவே மைக்கேல் ஹைட்டுக்கு கோர்ட்டிலிருந்து சம்மன் வந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் இருந்த தனது ஐந்து குழந்தைகள், மனைவி, மாமியார் என ஏழு பேரை சுட்டுக் கொன்றார். பின்னர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவன் மனைவி இடையேயான சண்டை மற்றும் விவாகரத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவில், தனது கணவரிடம் இருந்து எதற்காக மனைவி விவாகரத்து கேட்டார் என்பது தெரியவந்தால் தான், கொலைகளுக்கான நோக்கம் தெரியவரும்.