ஆத்தி!! எவ்வளவு பெருசு..!! பாத்ரூம்ல இருந்து தண்ணீர் வெளியே போகல.. என்னனு சோதனை செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஒன்று வீட்டின் குளியறையில்
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஒன்று வீட்டின் குளியறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள வீட்டு ஒன்றில், குளியறையில் இருந்து நீர் சரியாக வெளியேறாமல் இருந்துள்ளது. நீர் வெளியேற அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதால், உள்ளே ஏதோ அடைப்பு இருக்கலாம் என அந்த வீட்டை சேர்ந்தவர்கள் நினைத்துள்ளனர்.
இதனால் பிளம்பர் ஒருவரை வரவைத்து வீட்டின் குளியலறையில் நீர் வெளியேறும் பகுதியை சோதனை செய்யுமாறு கூறியுள்ளனர். பிளம்பரும் கீழே குனிந்து ஏதோனும் அடைத்திருக்கிறதா என பார்த்தபோது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நீர் வெளியேறும் துவாரத்தில் இரண்டு கண்கள் பளிச்சென தெரிந்துள்ளது.
இதனால் மிரண்டுபோன அந்த பிளம்பர் அந்த வீட்டினரை கூப்பிட்டு விவரத்தை சொல்ல, பின்னர் அந்த துவாரத்துக்குள் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, வீட்டிற்கு வந்த வீரர்கள் குளியலறை துவாரத்தில் இருந்த பெரிய மலைப்பாம்பு ஒன்றினை வெளியே எடுத்தனர்.
இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. நீர் வெளியேறும் சாக்கடை வழியாக இந்த பாம்பு உள்ளே வந்திருக்கலாம் என பாம்பு பிடிக்கும் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.