2025-ல் நடக்கப்போகும் விபரீதங்கள்.. மக்கள் தொகை பாதியாக குறையும் அபாயம்.!
2025-ல் நடக்கப்போகும் விபரீதங்கள்.. மக்கள் தொகை பாதியாக குறையும் அபாயம்.!
2025-ல் நடக்கக்கூடிய நிகழ்வுகள்
2025 புதிய வருடம் பிறந்துள்ள நிலையில், பிரான்சை சேர்ந்த நாஸ்டிராடாமாஸ் மற்றும் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா ஆகியோரின் கணிப்புகள் குறித்து சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களது கணிப்பின்படி, இந்த ஆண்டில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் பற்றி பார்க்கலாம்.
இயற்கை பேரிடர்கள்
ஐரோப்பிய கண்டங்களில் கடுமையான பேரழிவு ஏற்பட்டு மக்கள் தொகை குறையும். இதில், ரஷ்யா தப்பித்து பிழைத்து உலக நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும். அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளில் எரிமலை வெடிப்பு மற்றும் நில நடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும். கடும் போர்கள் ஏற்பட்டு ஐரோப்பிய பகுதிகள் பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: நாள்கணக்கில் தொடர்ந்த இருமல், சளி.. பெண்ணை பரிசோதிக்கையில் அதிர்ச்சி.!
பிளேக் நோய்
இதனை தொடர்ந்து பிளேக் நோய் போன்றவை இங்கிலாந்தை பாதித்து பெரிய அளவில் கொள்ளை நோய் தாக்கத்தினால் பாதிக்க கூடிய அபாயம் இருக்கிறது. ஒரு கொடிய எதிரியாக இந்த நோய் உருமாறி பேரழிவை ஏற்படுத்தும். போர் பல மாதங்கள் தொடர்வதால் வீரர்கள் சோர்ந்து, ஒரு கட்டத்தில் இந்த சோர்வின் காரணமாக போர் ஒத்திவைக்கப்படும். இந்த போர் எந்த எந்த நாட்டிற்கு இடையில் நடைபெறும் என்பது பற்றி அந்த கணிப்புகளில் விரிவாக தெரிவிக்கப்படவில்லை.
ஏலியன்களுடன் தொடர்பு
மேலும் 2025-இல் மனிதர்கள் ஏலியன்களுடன் தொடர்பு கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய அதிபரான புடின் மீது படுகொலை தாக்குதல் நடக்கும் எனவும், இங்கிலாந்து மன்னருக்கு எதிராக நாட்டில் கிளர்ச்சிகள் ஏற்படும் என்றும் அந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பிறந்தநாள் பார்ட்டியில் வினோத போட்டி; விஸ்கி குடித்தவர் மாரடைப்பால் மரணம்.!