வெடி விபத்து... கால்பந்து போட்டியின் இடையே வெடிகுண்டு விபத்து... 27 பேர் பரிதாப பலி.!
வெடி விபத்து... கால்பந்து போட்டியின் இடையே வெடிகுண்டு விபத்து... 27 பேர் பரிதாப பலி!
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்தில் 27 பேர் பலியான சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உள்நாட்டுப் போர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு உலகிலேயே மிகவும் வறுமையான நாடாக இருந்து வருவது சோமாலியா. இந்த நாட்டில் நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற வெடி விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 50க்கும் அதிகமான ஒரு படுகாயம் அடைந்து இருக்கின்றனர்.
செயலிழந்ததாக கருதப்பட்ட பழைய பீரங்கி குண்டு ஒன்று மைதானத்திற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்திருக்கிறது அந்த குண்டு வெடித்ததில் தான் இந்த விபத்து நடைபெற்றதாக சோமாலியா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து போட்டி நடைபெற்ற இடத்தில் வெடிகுண்டு விபத்து நிகழ்ந்ததால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் செயலிழந்ததாக கருதப்பட்ட பழைய பீரங்கி குண்டை ஏன் கால்பந்து மைதானத்திற்கு அடியில் புதைக்க வேண்டும் என்ற கேள்வியும் அங்கு எழுந்துள்ளது.