சுய இன்பத்திற்காக 54 வயது முதியவரின் பகீர் செயல்.. ஸ்கேனில் அதிர்ச்சி ரிப்போர்ட்.. ஆடிப்போன மருத்துவர்கள்.. ஐயோ, அம்மா கதறல்.!
சுய இன்பத்திற்காக 54 வயது முதியவரின் பகீர் செயல்.. ஸ்கேனில் அதிர்ச்சி ரிப்போர்ட்.. ஆடிப்போன மருத்துவர்கள்.. ஐயோ, அம்மா கதறல்.!
வயிறு வலிப்பதாக மருத்துவமனைக்கு சென்ற முதியவரின் மலக்குடலில் இருந்து 2 கிலோ எடையுள்ள கம்பி மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சுய இன்பத்திற்காக முதியவர் மேற்கொண்ட ஆபத்தான காரியம் உயிருக்கு எமனாகத் தெரிந்த பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பிரேசில் நாட்டினை சேர்ந்த 54 வயதான முதியவர், அங்குள்ள மனாஸில் நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்களிடம் தன்னால் மலம் கழிக்க இயலவில்லை, குமட்டல் மற்றும் வயிற்று வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு சாதாரண பிரச்சனையாக இருக்கும் என எண்ணி மருத்துவர்கள் மருந்து பரிந்துரைத்துள்ளனர்.
பின்னர், 2 நாட்கள் கழித்து அதே மருத்துவமனைக்கு முதியவர் சென்ற நிலையில், அவரின் வயிறை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். வயிற்று பகுதியில் ஸ்கேன் எடுக்க முதியவர் மறுப்பு தெரிவித்த நிலையில், மருத்துவர்கள் அவரை கண்டித்து ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.
அப்போது, முதியவரின் மலக்குடல் பகுதியில் 2 கிலோ எடையுள்ள 20 செ.மீ நீளமுள்ள இரும்பு கம்பி இருந்துள்ளது. இது பெருங்குடல் - மலக்குடல் சந்திக்கும் பகுதியில் சரியாக இருந்துள்ளது. இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கம்பியை வெளியே எடுக்கலாம் என மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், இடையில் அவருக்கு மயக்கம் தெளிந்து முயற்சி தோல்வியுற்றது.
பின்னர், சாமர்த்தியமாக செயல்பட்ட மருத்துவர்கள் இரும்பு கம்பியை ஒருவழியாக வெளியே எடுத்தனர். சிகிச்சைக்கு பின்னர் 3 நாட்கள் கழித்து முதியவர் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கையில், "பாலியல் ஆசை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. நடுத்தர வயதுடைய ஆண்கள் அதிகளவு பாலியல் மோகத்தால் தூண்டப்பட்டு, வினோதமாக எதையாவது செய்து விபரீதத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
அவர்களின் அலட்சியமான மற்றும் ஆபத்தான பாலியல் சீண்டல் ஆசை, அவர்களின் உயிருக்கே விபரீதமாக முடியலாம். கண்ணாடி, இரும்பு, பிளாஸ்டிக், பிற பொருட்கள் என தங்களுக்கு தெரிந்த வழியில் 5 நிமிட அற்ப சுகத்தை எண்ணி உடல் நலத்தை கெடுக்கின்றனர். இவ்வாறே முதியவரும் செயல்பட்டுள்ளார். நல்ல வேலையாக அவரின் உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.