இனி வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யலாம்! விரைவில் வருகிறது அதிரடி சட்டம்!
Brithaniya announced new rule for abortion at home
இந்தியாவை பொறுத்தவரை கருக்கலைப்பு செய்வதோ, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய முயற்சிப்பதோ சட்டப்படி குற்றம் ஆகும்.
இது ஒருபுறம் இருக்க, பிரித்தானியா நாட்டில் கருவுற்று 10 வாரத்திற்குள் இருக்கும் பெண்கள் வீட்டிலேயே தங்களது கருவை களைத்து கொள்ளலாம் என்ற சட்டம் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டுவிதமான மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ய முடியும். தற்போது இதை மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களின் கண்காணிப்பின் பேரிலேயே கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்கிறார்கள்.
வலி, இரத்தப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற காரணங்களால் பெண்கள் மருத்துவமைக்கு சென்று கருவை கழிப்பதற்காக கூறுகின்றனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஓன்று வீட்டிலிருந்து கருக்கலைப்பு செய்தாலும் பாதுகாப்பானதாகவே இருக்கும் என கூறுகிறது.
சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய முறையின் கீழ் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் இரண்டாவது மாத்திரையை வீட்டிலேயே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்து சுகாதார அமைச்சர் சில சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.