×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2022 இப்படித்தான்: வேற்றுகிரகவாசிகள் தொடர்பு முதல், சைபீரிய வைரஸ் வரை - பாபா வாங்கா கணிப்பு.!

2022 இப்படித்தான்: வேற்றுகிரகவாசிகள் தொடர்பு முதல், சைபீரிய வைரஸ் வரை - பாபா வாங்கா கணிப்பு.!

Advertisement

உலக நாடுகளில் பல நகரங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும், சைபீரியாவில் உறைந்துள்ள ஆபத்தான வைரஸ் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்படும் என பாபா வாங்காவின் எதிர்கால குறிப்பேடுகள் தெரிவித்துள்ளன.

பல்கேரியா நாட்டினை சார்ந்த பெண் ஆன்மீகவாதியாக பாபா வாங்கா எதிர்காலத்தை கணிக்கும் பெண்மணியாக இருந்து வந்தார். அவரது 12 வயதில் புயலின் போது அவரது பார்வை பறிபோன பின்னர், கடவுள் தனக்கு எதிர்காலத்தை பார்க்கும் சக்தியை கொடுத்தாக தெரிவித்து இருந்தார். அதன்படி, அவர் கூறிய பல விஷயங்களும் உண்மையில் உலகளவில் நடந்து உலக நாடுகளையே அதிரவைத்தது.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்ட சம்பவம், பிரெக்சிஸ்ட், சோவியத் யூனியன் கலைப்பு, இளவரசி டயானா மரணம், அமெரிக்கா அதிபராக பராக் ஒபாமா, 2004 சுனாமி, கொரோனா வைரஸ் அவரை அவர் கூறியது ஒவ்வொன்றாக நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த 1996 ஆம் வருடம் அவர் மறைவதற்கு முன்னர், உலகம் 5079 ஆம் வருடம் வரை இயங்கும் என்றும் தெரிவித்து, நிகழும் துயரத்தையும் பதிவிட்டு சென்றார்.

இந்நிலையில், 2022 ஆம் வருடம் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் கணித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகளே எதிர்பார்க்கும் நிலையில், சைபீரியாவில் உறைந்துள்ள ஆபத்தான வைரஸ் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைப்போல, உலக நாடுகளில் பல நகரங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும், வெட்டுக்கிளிகள் பெரும் திரளாக விவசாய பகுதிகளை குறிவைத்து தாக்கும், Virtual Reality பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு, பூமியில் உள்ள உயிர்களை தேட வேற்றுகிரக வாசிகள் Oumuamua என்ற சிறுகோள்களை அனுப்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bulgaria #Bulgaria Mystic #Baba Vanga #2022 #world #India #Cyberia Virus
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story