#Shocking Video: கேசினோ ஹோட்டல் தீ விபத்தில் 19 பேர் பலி.. உயிரை காக்க மாடியில் இருந்து குதித்த பதைபதைப்பு சம்பவம்..!
#Shocking Video: கேசினோ ஹோட்டல் தீ விபத்தில் 19 பேர் பலி.. உயிரை காக்க மாடியில் இருந்து குதித்த பதைபதைப்பு சம்பவம்..!
கம்போடியா நாட்டில் இருக்கும் கிராண்ட் டயமண்ட் நகரில் கேசினோ ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. நேற்று ஹோட்டல் வழக்கம்போல இயங்கி வந்த நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், கேசினோ ஹோட்டலின் முதல் தளத்தில் 400 பேர் இருந்த சமயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 19 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 70 பேர் படுகாயம் அடைந்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் ஜன்னல் வழியே குதித்த பதைபதைப்பு சம்பவமும் நடந்தது.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வெளியாகி காண்போரை பதறவைத்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.