#Breaking: "இந்தியர்களுடன் துணை நிற்போம்" - ஒடிசா இரயில் விபத்து குறித்து, கனடா பிரதமர் ஜஸ்டின் உருக்கமான இரங்கல்.!
#Breaking: இந்தியர்களுடன் துணை நிற்போம் - ஒடிசா இரயில் விபத்து குறித்து, கனடா பிரதமர் ஜஸ்டின் உருக்கமான இரங்கல்.!
238 பேரின் உயிரை காவுவாங்கிய இரயில் விபத்து விவகாரத்தில், கனடா நாட்டின் பிரதமர் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் அதிவிரைவு இரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி பயணித்த துரந்தோ இரயில், சரக்கு இரயில் தடம்புரண்டு மோதிக்கொண்ட விபத்தில் 238 பேர் பலியாகினர். 900 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலம் ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையிலான குழு ஒடிசா விரைகிறது.
இன்று காலை விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட இரயில்வே அமைச்சர் வைஷ்ணவ், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி தனது இரங்கலை பதிவு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், உயிரிழந்த தமிழர்களுக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
தமிழர்கள் 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், படுகாயம் அடைந்த 900 பேரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்து இரங்கல் தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின், "இந்தியாவின் ஒடிசாவில் ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய மக்களுடன் கனடியர்கள் உடன் நிற்கிறார்கள்" என ட்விட்டரில் கூறியுள்ளார்.