சீனாவில் துக்கநாள்! கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி!
China commerate corono virus dead people
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது 190 நாடுகளில் தீவிரமாக பரவி, கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 11,17,860 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 59,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸால் அமெரிக்கா, இத்தாலி சீனா,பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் 80000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள், முதியவர்கள், மருத்துவர்கள் என 3300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று சீனாவில் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காலை 10மணியளவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்தும் 3 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.