குவியும் சவப்பெட்டிகள்..! இத்தாலிக்கு உதவ களமிறங்கியது சீனா..! நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அதிரடி.!
China helps to italy to control corono
சீனாவின் உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. வைரஸ் உருவான சீனாவை காட்டிலும் இத்தாலி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி முதலிடத்தை பிடித்துள்ளது.
இத்தாலியில் இதுவரை 41, 506 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3, 405 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர் இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 25 பேரின் சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்பதால் அந்நாட்டில் நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் தேங்கி கிடக்கின்றன.
சவப்பெட்டிகளை எடுத்துச்செல்ல இத்தாலி அரசு அந்நாட்டு ராணுவத்தை வரவழைத்துள்ளது. மேலும், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போவதால் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீன அரசு களமிறங்கியுள்ளது.
இத்தாலிக்கு உதவுவதற்காக 10,000 வெண்டிலேட்டர்கள், 20 லட்சம் மாஸ்க்குகள், 20,000 ஆயிரம் பாதுகாப்பு சூட்டுகளை அந்நாட்டிற்கு தருவதாக சீனா கூறியுள்ளது. மேலும், கொரோனாவில் சீன மருத்துவர்களுக்கு அனுபவம் இருப்பதால், சீனாவில் இருந்து சிறப்பு மருத்துவர்களை இத்தாலிக்கு அனுப்ப சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவின் அதிரடியால் இத்தாலியின் நிலை விரைவில் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.