'ஒன் டே மட்டும் வொய்ப்' - சீனாவில் நடக்கும் திடீர் திருமணம்.! இது தான் காரணமா.?!
'ஒன் டே மட்டும் வொய்ப்' - சீனாவில் நடக்கும் திடீர் திருமணம்.! இது தான் காரணமா.?!
சீனாவில் ஹெபெய் மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் தற்போது ஒருநாள் திருமணங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சமீப காலமாகவே சீன ஆண்கள் ஏழ்மையால் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, அவர்கள் திடீரென மரணம் அடைந்தால் அவர்களது குடும்ப கல்லறையில் உடல்கள் புதைக்கப்பட மாட்டாது. எனவே தங்கள் முன்னோர்களுடன் சொர்க்கத்தில் இணைய முடியாது என்று நம்பப்படுகிறது.
இது ஒரு பாவ செயலாகவும் அப்பகுதி மக்கள் நினைக்கின்றனர். எனவே, அனைத்து ஆண்களுக்கும் திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆகவே, தான் தற்போது ஒரு நாள் திருமணங்கள் பெருகி வருகின்றன. இப்படி ஒரு நாள் மட்டும் திருமணம் செய்து கொண்டு மறுநாளில் இருந்து அவரவர் வேலையை பார்க்க போய் விடுகின்றனர்.
ஏழை, நடுத்தர குடும்ப பெண்களை பணம் கொடுத்து ஒரு நாள் மட்டும் திருமணம் செய்து வைக்கும் தரகர்கள் அங்கு பெருகி வருகின்றனர். பணத்திற்காக பல திருமணமான பெண்கள் கூட இதுபோல ஒரு நாள் திருமண பிசினஸில் ஈடுபட்டுள்ளனர். இந்த திருமணங்கள் சட்டப்பூர்வமானது கிடையாது. இது வெறும் சடங்கு தான்.