மீண்டும் ஊரடங்கை கையில் எடுத்த சீனா.. கொரோனா அதிகரிப்பால் நடவடிக்கை.!
மீண்டும் ஊரடங்கை கையில் எடுத்த சீனா.. கொரோனா அதிகரிப்பால் நடவடிக்கை.!
உலக நாடுகளுக்கு கொரோனா என்ற அரக்கனை தந்த நாடாக இன்றளவும் சீனாவின் மீது அதிருப்தி இருந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனாவால் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்தாலும், சீனா நோய்தொற்று கட்டுப்பாடுகள் விவகாரத்தில் கடுமையாக செயல்பட்டு வருகிறது.
தற்போது, சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், சீனா கொரோனாவை தடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் தென்பகுதியில் அமைந்துள்ள பெய்ஸ் (Baise) நகரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கிறது.
இதனையடுத்து, 14 லட்சம் மக்கள் தொகைக்கொண்ட பெய்ஸ் நகரில், 135 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் 2 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் வாகனம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவையை தவிர்த்து மக்கள் வெளியே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.