×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உபயோகப்படுத்திய காண்டம், செத்துப்போன கரப்பான் பூச்சி.. கேடி ஆசாமியை தட்டிதூக்கிய போலீஸ்..!

உபயோகப்படுத்திய காண்டம், செத்துப்போன கரப்பான் பூச்சி.. கேடி ஆசாமியை தட்டிதூக்கிய போலீஸ்..!

Advertisement

மோசடி செயல் புதுவிதமாக அரங்கேறிய நிலையில், 21 வயது இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சீன நாட்டில் உள்ள ஜேஜியாங் மாகாணம், தாய்சோவு பகுதியை சார்ந்த மாணவர் ஜியான் (வயது 21). இவர் கல்லூரியில் பயணித்து வருகிறார். அவ்வப்போது வெவ்வேறு நகர்களுக்கு செல்லும் இவர், ஹோட்டலில் அறை எடுத்து தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சுத்தம் தொடர்பாக வாக்குவாதம்

அவ்வாறு அறையில் தங்கும்போது, அங்கு கரப்பான் பூச்சி மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆணுறை, தலைமுடி போன்றவற்றை அவராக போட்டுவிட்டு, அதை தனக்கு சுத்தமாக இல்லை என்று கூறி வாதம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: இந்திய அரசுத்துறை அதிகாரிகளின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு; கனடா மீது இந்தியா குற்றச்சாட்டு.!

இழப்பீடு பெற்றார்

சில நிறுவனங்களில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் அடாவடி செய்து வந்திருக்கிறார். இவ்வாறாக மொத்தமாக 63 க்கும் மேற்பட்ட ஹோட்டலில் இருந்து அவர் இழப்பீடு பணத்தை பெற்றதாக தெரியவருகிறது. 

இதனிடையே இவரை கண்காணித்த விடுதி ஊழியர்கள், அவர் மீது குற்றசாட்டை முன்வைக்க, அதன்பேரில் நடந்த விசாரணையில் இளைஞரின் மோசடி செயல் அம்பலமானது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜியானை கைது செய்தனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து அதானிக்கு எதிராக பறந்த நோட்டிஸ்.. நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Scam #Chinese man scam #hotel #Dead cockroaches #World news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story