×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.! ஜாம்பி பூச்சிகள் 221 வருடங்களுக்குப் பிறகு பூமிக்கு மேலே வருகிறதா.!?

என்னது.! ஜாம்பி பூச்சிகள் 221 வருடங்களுக்குப் பிறகு பூமிக்கு மேலே வருகிறதா.!?

Advertisement

கடந்த 221 ஆண்டுகளாக நிலத்தடியில் வாழ்ந்து வந்த ஜாம்பி பூச்சிகள் என்று சொல்லக்கூடிய சிக்காடா ஃபவுண்ட் ஆன்யுஎஸ் பூச்சி இனங்கள் பூமிக்கு மேலே வர ஆரம்பித்துள்ளது. இவை வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் நிலத்தடிக்கு மேல் வர தொடங்கியுள்ளது. 

ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து ஜாம்பி பூச்சிகள் 1803 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பூமிக்கு மேல் வரத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் 221 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் வாழும் ஜாம்பி பூச்சிகள் அமெரிக்காவில் 17 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிலத்தடிக்கு மேலே வர ஆரம்பித்துள்ளது. 

இந்த ஜாம்பி பூச்சிகள் பூமிக்கு மேலே வந்து மரங்களுக்கு அருகில் முட்டை இட்டு அதன் சந்ததிகளை வளரச் செய்கின்றன. சிக்காடா நிபுணர் ஜான் என்பவர் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆவார். இவர் கூறுவது என்னவென்றால் ஜாம்பி பூச்சிகள் வெப்பநிலை அதிகரிப்பதால் பூமிக்கு மேல் வருகிறது. இது ஒரு 'இயற்கையான நிகழ்வு' என்கிறார். 

இந்த வகை பூச்சி தனது வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதியாக 221 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிவருகிறது. இப்போது ஏப்ரல் 2024-ல் வெளிவந்த இந்த பூச்சி, இனிமேல் 2244 ஆண்டுக்கு தான் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்காடா பூச்சி என்று சொல்லக்கூடிய ஜாம்பி பூச்சிகள் வீட்டு தோட்டங்கள் மற்றும் பயிர்களுக்கு தீங்கை விளைவிக்காது. பூஞ்சையை உட்கொள்ளும் சிகாடாக்கள் மட்டுமே பாதிக்கப்படும். மனிதர்கள் பாதிக்கப்படுவதில்லை. இந்த பூச்சிகள் இப்போது எல்லா இடங்களிலும் உள்ளது என்று நிபுணர் கூறுகிறார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cicadas #Insects #Long term years #Earth #Temperature
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story