கோவை: பாதாள சாக்கடை பணியில் சோகம்; இளைஞர் மணல் குவியலில் சிக்கி மரணம்.!
கோவை: பாதாள சாக்கடை பணியில் சோகம்; இளைஞர் மணல் குவியலில் சிக்கி மரணம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி, ஐ.ஓ.பி காலனி, ராஜேந்திரன் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளானது நடைபெறுகிறது. இப்பணியை தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தின் பேரில் செய்து வரும் நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது, பணியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரின் மகன் கெளதம் (வயது 20) ஆகியோர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அச்சமயம் பொக்லைன் கொண்டு 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக மண் சரிந்தது. இந்த சம்பவத்தில் கெளதம் குழிக்குள் விழுந்தார்.
இதையும் படிங்க: உள்நாட்டுப்போரால் பயங்கரம்; பெண்கள், குழந்தைகள் என ஈவு-இரக்கமின்றி 200 பேர் கொலை.!
மூச்சுத்திணறி மரணம்
அவரின் மேலும் மண் விழுந்துவிட, உடனடியாக கௌதமை மீட்கும் முயற்சி நடைபெற்றது. அது முடியாததால் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து கௌதமை மீட்டனர். ஆனால், அவர் மண்ணுக்குள்ளேயே மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கௌதமின் உடல் காவல்துறையினரால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அபகுத்தியில் பெரும் அதிச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த திருநங்கை; கழிவறையில் பயங்கரம்..!