மீண்டும் அவதாரம் எடுக்கும் கொரோனா...கொத்து கொத்தாக மடியும் மக்கள்... மருத்துவமனையில் குவியும் சடலங்கள்..!
மீண்டும் அவதாரம் எடுக்கும் கொரோனா...கொத்து கொத்தாக மடியும் மக்கள்... மருத்துவமனையில் குவியும் சடலங்கள்..!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது மனிதர்களிடம் ஏற்படுத்தும் ஒரு வகையான தொற்று நோயாகும். இந்த கொரோனா வைரஸானது சீனாவில் உள்ள ஊகான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
மேலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் சமீபகாலமாக கட்டுப்பாட்டில் இருந்த வந்த நிலையில் மீண்டும் அவதாரம் எடுத்திருப்பது உலக மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமானதையடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா பரவலின் தாக்கத்தால் மருத்துவமனையில் குவியல் குவியலாக சடலங்கல் குவிந்துள்ள வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சீனாவில் கொரோனா வைரஸால் அதிகளவு முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினசரி 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.