கொரோனா நோயிலிருந்து மீண்ட சந்தோசத்தில் கையை ஆட்டியபடி கும்பலாக வெளியேறிய மக்கள்! வைரலாகும் வீடியோ.
Coronavirus
சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸ் பாம்பு சூப்பில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கவோ அல்லது சரிசெய்யவோ இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் சீனாவை தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்தியா போன்று மற்ற அண்டை நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதிகம் தாக்கப்பட்ட உகான் நகரின் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நோயாளிகள் நோயிலிருந்து மீண்டு சந்தோசமாக தங்களது கைகளை அசைத்தபடி வெளியேறும் காட்சி வைரலாகி வருகிறது.