10 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்..! 1 மணி நேரத்தில் 50 பேருக்கு பாதிப்பு.! கதிகலங்கும் ஈரான்.!
Corono effect in iron people die every 10 minutes
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த COVID-19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
வைரஸ் உருவான சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியும், ஈரானும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முன்னிலையில் உள்ளது. ஈரானில் பலி எண்ணிக்கை 4000 தாண்டிவிட்டதாகவும், 10 நிமிடத்திற்கு ஒருவர் பலியாகி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஈரான் அரசு உண்மையான பாதிப்புகளை வெளியே கூறவில்லை என்ற தகவல் ஒருபுறம் கிளம்பி வரும் நிலையில், ஒருமணி நேரத்திற்கு 50 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருவதாகவும், 10 நிமிடத்திற்கு ஒருவர் பலியாகி வருவதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கியானஸ் ஜகன்பூர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.