டிரம்பையும் விட்டுவைக்காத கொரோனா அச்சுறுத்தல்..! அமெரிக்கா அதிபருக்கே இப்படி ஒரு நிலைமையா.?
Corono fear US president not touching his face for a week
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 70 கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சத்தால், எனது முகத்தை நானே தொடக்கூடாது என வெள்ளைமாளிகை அதிகாரிகள் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது மக்கள் கூடும் கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறும் பாதுகாப்பு அதிகாரிகள் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் கொரோனா அச்சம் விட்டுவைக்கவில்லை.