கொரோனா பரவல் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்.. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும்.. பீதியை கிளப்பும் ஆராய்ச்சி முடிவுகள்!
corono will last for 2 years and will come back
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்றும், 2022 ல் மீண்டும் அலையலையாக கொரோனா பரவும் என்றும் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொடிய கொரோனா வைரஸ் இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி வருகிறது. இதற்கான தடுப்பூசியோ, மருந்தோ இன்னும் கண்டுபிடிக்காததால் சமூக விலகல் மட்டும் தான் தீர்வாக இதுவரை இருந்து வருகிறது. இதனால் அணைத்து நாடுகளும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழ்நிலை எப்போது முடிவிற்கு வரும் என்ற ஏக்கத்தில் உலக மக்கள் காத்திருக்கின்றனர். இந்த தருவாயில் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் மேலும் வேதனையை தருவதாக உள்ளது.
அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளின்படி கொரோனா தொற்றானது இன்னும் இரண்டு வருடங்கள் நீடிக்கும் என்றும் உலகின் முக்கால்வாசி பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். தடுப்பூசியோ, மருந்தோ இல்லாததால் இயற்கையாகவே கொரோனவை எதிர்க்கும் சக்தி மனிதர்களுக்கு ஏற்படும் வரை இது நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் மீண்டும் 2022 ல் அலையலையாக கொரோனா பரவும் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.