இலங்கை குண்டுவெடிப்பு! கண்ணீர் விடும் கிரிக்கெட் வீரர்கள்!
cricket players tweet about bomb blast
ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இந்தநிலையில், இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பலா் உயிாிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
அப்பகுதியில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 படுகாயம் அடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோர் குண்டுவெடிப்பு குறித்து ட்வீட் செய்துள்ளனர். அங்கு நடந்த இந்த இழிவான காட்டுமிராண்டி செயல்களினால் நான் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக எனது இதயம் நொறுங்கிவிட்டது என ங்ககாரா பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் இருக்கும் அனைவருக்கும் இந்த சம்பவம் நடந்த நாள் சோகமான நாள். 10 ஆண்டுகால அமைதிக்கு பிறகு மீண்டும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை கண்டுள்ளோம். இந்த நேரத்தில், நாம் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.