கியூபா ஹோட்டலில் சமையல் கியாஸ் கசிந்ததால் விபத்து... 8 பேர் பலி.. 30 பேர் படுகாயம்...
கியூபா ஹோட்டலில் சமையல் கியாஸ் கசிந்ததால் விபத்து... 8 பேர் பலி.. 30 பேர் படுகாயம்...
வட அமெரிக்க நாடான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற ஹோட்டல் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஹோட்டலில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. சில நிமிடத்தில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
அதனையடுத்து மீட்பு குழுவினர் ஹோட்டலுக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஹோட்டலில் சமையல் கியாஸ் சிலிண்டர் கசிந்ததால் தான் இந்த விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது.